மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று (13)காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு வாழை சேனை பிரதான வீதியின் ஊறணி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஏறாவூர் சாலை பேருந்து விபத்துக்கு உள்ளானதாக மட்டக்களப்பு போக்குவரத்து பிரிவு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்தானது பேருந்து சாரதி பிழையான முறையில் பேருந்தை வீதியில் செலுத்தியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்..
குறித்த விபத்தின் காரணமாக பேருந்தில் பயணித்த ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனை வைத்திய சாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சாரதி மற்றும் நடத்துனர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி உள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.