நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி போட்டியிடுவது
தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர்
பூபாலபிள்ளை பிரசாந்தன் ஏற்பாட்டில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி திருகோணமலை ,மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டங்களிலும் ,யாழ்ப்பாணத்தில் சில உள்ளூராட்சி மன்றங்களிலும், பொலனறுவை மாவட்டத்தில் தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களிலும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தனித்துவமாக படகு சின்னத்தில் போட்டியிட போவதாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் கட்சியின் தலைமை காரியாலத்தில் நடைபெற்ற கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடலை தொடர்ந்து எடுக்கக்கப்பட்ட முடிவுக்கு அமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார் .