நெருப்போடு விளையாடாதீர்கள் - காசி ஆனந்தன் எச்சரிக்கை



நெருப்போடு விளையாடாதீர்கள் என ஈழத்தமிழர் நட்புறவு மைய தலைவர் காசி ஆனந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழீழத்தில் இயங்கும் முதன்மை வாய்ந்த சமய நிறுவனங்களும் தமிழ் மாணவர் அமைப்புகளும், போரினால் பாதிக்கப்பட்டோர் இயக்கங்களும் ஈழத் தமிழர் சிக்கலுக்கான தீர்வு குறித்து அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையை அமெரிக்காவில் இயங்கும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர் அமைப்புகள் ஆதரித்திருக்கின்றன.

இக்கோரிக்கையை ஈழத்தமிழர் நட்புறவு மையமும் ஆதரிக்கிறது என்பதை இவ்வறிக்கை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


புதியது பழையவை