மட்டக்களப்பு - களுதாவளைக் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் இராட்சத ஆமையொன்று கரையொதுங்கியுள்ளது.
குறித்த பகுதியில் இருந்த கடற்தொழிலாளர்களே கரையொதுங்கியுள்ள ஆமையை நேற்று (18) அவதானித்து தகவல் வழங்கியுள்ளனர்.
இவ்வாறு கரையொதுங்கிக் கிடந்த ஆமை உயிரிழந்துள்ளதாகவும், இது சுமார் 50 கிலோ கிராமிற்கு மேல் நிறை கொண்டது எனவும் கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வருடமும் இவ்வாறு கிழக்குக் கடற்கரைப் பகுதியில் பல ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
