இந்தியாவின் சர்வதேச பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகம் இணைந்து நடாத்துகின்ற ‘ஒரே குடும்பம் ஒரே உலகம்’ என்ற தொனிப்பொருளினாலான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற மகாநாட்டில் பிரதம அதிதியாக சிறீ சத்திய சாயி பாபா பவுன்டேஷன் அமைப்பின் ஸ்தாபகர் சற்குரு சிறீ மதுசுதன் சாய் கலந்துகொண்டார்.
தற்போது இலங்கை எதிர்கொள்கின்ற சவால்களுக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆராச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்யலாம் என்பது தொடர்பான விஞ்ஞான ரீதியான கலந்துரையாடல் மகாநாடு கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் வி.கனகசிங்கம் தலைமையில் நடைபெற்றது.
மகாநாட்டில் பங்களாதேஸ் ஜஹான் ஜிர் நாகர் பல்கலைக்கழக விரிவுரையாளர் அணு முஹம்மட், இந்தியாவின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் இந்தியா, பாகிஸ்தான், சீனா, இலங்கை அறிஞர்கள், ஆய்வாளர்கள், விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.