மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைதென் எருவில் பற்று பிரதேச களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனையினால் பிரதேசத்திலுள்ள பாடசாலை சிற்றுண்டிசாலைகள் மற்றும் பல் பொருள் வர்த்தக நிலையங்களில் உணவின் தரம், காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனைசெய்வோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றன.
பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் உதயசூரிய பணிப்புரைக்கமைய மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பில் உணவு பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் போது சுகாதாரமற்ற முறையில் உணவு விற்பனையில் ஈடுபடுவோர்,கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைசெய்தோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.