மட்/பட்/கோவில்போரதீவு விவேகானந்தா மகா வித்தியாலயத்திற்கு போட்டோ பிரதி இயந்திரம் வழங்கிவைக்கி வைப்பு


மட்டக்களப்பு கோவில்போரதீவு விவேகானந்தா மகா வித்தியாலயத்திற்கு போட்டோ பிரதி இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை நிர்வாகத்தினால் கோவில் போரதீவை சேர்ந்த தற்போது கனடா மாநகரில் வசித்து வரும் சமூக தொண்டரும் பாடசாலையின் பழைய மாணவருமான தாமோதரம் தக்கன் அவர்களினால் இந்த போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டது.

மாணவர்களின் கற்றல் ஆசிரியர்களின் கற்பித்தல் நடவடிக்கைக்கு உதவக் கூடிய வகையில் சுமார் மூன்று லட்சம் ரூபாய் பெறுமதியான போட்டோ பிரதி இயந்திரம்  வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி போட்டோ பிரதி இயந்திரம் நேற்றைய தினம் (06)தாமோதரம் தக்கன் அவர்களின் நிதி பங்களிப்பு ஊடாக அவரின் சகோதரர்களான தாமோதரம்- மகேந்திரன், தா.லலாசேகரம் (வாவா) அவர்களினால் பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர்கள், முன்னிலையில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது...

மேற்படி போட்டோ பிரதி இயந்திரத்தை வழங்கி வைத்த தாமோதரம் தக்கன் அவர்களுக்கு பாடசாலை நிருவாகம் சார்பிலும் கிராம பொதுமக்கள் சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.


புதியது பழையவை