தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டக்களப்பில் கட்டுப்பணத்தைச் செலுத்தியது



மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகள் மற்றும்
சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தி வருகின்றன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இன்றைய தினம்
தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை செலுத்தினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கரிதரன் கட்டுப்பணத்தை
செலுத்தினார்.
புதியது பழையவை