மாவீரர் துயிலுமில்லங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் கைவிடும் வரையில் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு செல்வதில்லையென்ற தீர்மானத்தை தமிழ் கட்சிகள் எடுக்கவேண்டும் என மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக்குழு தலைவர் லவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தமிழ் மக்களின் உரிமைகளை நசுக்கிக்கொண்டு அவர்களுடன் பேசுவதாக நாடகமாடுவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது எனவும் அக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
எதிர்வரும் 04ஆம் திகதி தரவை மாவீரர் துயிலுமில்லத்தினை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் துயிலுமில்லத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்கு அனைத்து தமிழ் தேசிய ஆதரவாளர்களும் ஆதரவு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்துள்ளனர்.