நேபாளத்தில் பாரிய நிலநடுக்கம்



நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம்,  இந்தியாவிலும் உணரப்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் இன்று (24.01.2023) நண்பகல் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டதாவது,

பூமியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் 
நேபாளத்தில் இன்று நண்பகல் 2.28 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது.


 
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜூம்லா மாவட்டத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பூமியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவிலும் உணரப்பட்டது
இதன்போது, உயிர் சேதம் ஏதும் நேரிட்டுள்ளதா என்பது தொடர்பாக தகவல் இதுவரை  குறிப்பிடப்படவில்லை.

இந்த நிலநடுக்கம் டெல்லியிலும், வடக்கு உத்தரப் பிரதேசத்திலும், உத்தராகண்ட்டிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.


வீடுகள், அலுவலகங்கள் என கட்டிடங்களுக்குள் இருந்த பலர், அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை