மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு புதிய ஆசிரிய ஆலோசகர்கள் நியமனம்மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு ஆசிரியர் ஆலோசர்களாக உள்ளீர்க்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தில்
இன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், மாகாண கல்வி பணிப்பாளர் செல்வி அகிலா கணகசூரியம் கலந்து கொண்டு நியமனங்களை
வழங்கி வைத்தார்.

ஆசிரியர் ஆலோசர்களுக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வில் உதவி கல்வி பணிப்பாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
புதியது பழையவை