ஒரே பிரசவத்தில் பிறந்த மூவர் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனைமாத்தறை, கொட்டபொல தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பேர் இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அப்பாடசாலையின் அதிபர் பிரேமவன்த்த அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

அப்பாடசாலையில் கல்வி பயிலும், பசிந்து பபசர (181) , ஒவிந்து பிராபசர (177), டினிந்து பிம்சர (167) ஆகிய மூவருமே இவ்வாறு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த ஒரே பிரசவத்தில் பிறந்த சகோதரர்கள் ஆவர்.

கொட்டபொல தேசிய பாடசாலையில் அதிக புள்ளிகளைப் பெற்றவர்கள் வரிசையில், 181 புள்ளிகளைப் பெற்ற பசிந்து பபசர விளங்குவதாக அப்பாடசாலையின் கனிஷ்டப் பிரிவின் அதிபரான துஷாரா மதரசிங்க தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை