நண்பர்களே, பெரியவர்களே, எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் 21.1.2023 மதியம்12மணிக்கு முதல் கையளிக்கப்படவேண்டியுள்ளது.
இம்முறை இத்தேர்தலில் கண்ணியமான, சிறந்த நடத்தையுடைய, மக்களையும் மண்ணையும் நேசிக்கின்ற வேட்பாளர்களை நிறுத்துவதினூடாக சிறந்த எதிர்கால அரசியலை கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கோடு செயற்பட்டு வருகிறோம்.
சிறந்த தலைமைத்துவம், எதிர்கால சிந்தனை, ஊழலற்ற மக்களுக்காக அரசியல் பயணத்தை ஆரம்பிக்க ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகளையும் பெண் பிரதிநிதிகளையும் அனுபவசாலிகளையும் இணையுமாறு எதிர்பார்க்கின்றோம்.
