அனைத்து அரச நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள விசேட உத்தரவுஇலங்கையில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் விசேட உத்தரவொன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஒரு வார காலத்திற்கு அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அது தொடர்பான சுற்றறிக்கை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.


பெப்ரவரி நான்காம் திகதி நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், பெப்ரவரி முதலாம் திகதி முதல் 7ஆம் திகதி வரை அனைத்து அரச கட்டடங்களிலும் தேசிய கொடியை பறக்க விடுமாறு கோரப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை