👉🏿மட்டக்களப்பு மாவட்டம்
1, மட்டக்களப்பு மாநகரசபை:
முதலாம் வேட்பாளர் நியமனப்பத்திரம் வட்டார வேட்பாளர்கள்: 20, வேட்பாளர்கள் அதில் பெண்கள்:03.
பட்டியல் வேட்பாளர்கள்:16, அதில் பெண்கள்:08.
2)மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை:
முதலாம் வேட்பாளர் நியமனப்பத்திரம் வட்டார வேட்பாளர்கள்: 10,வேட்பாளர்கள் அதில் பெண்கள்:01.
பட்டியல் வேட்பாளர்கள்:09, அதில் பெண்கள்:04.
3)மண்முனை தென் எருவில் களுதாவளை:
முதலாம் வேட்பாளர் நியமனப்பத்திரம் வட்டார வேட்பாளர்கள்: 12,வேட்பாளர்கள் அதில் பெண்கள்:02,
பட்டியல் வேட்பாளர்கள்:11,அதில் பெண்கள்:05
4)போரதீவுப்பற்று வெல்லாவெளி:
முதலாம் வேட்பாளர் நியமனப்பத்திரம் வட்டார வேட்பாளர்கள்: 10,வேட்பாளர்கள் அதில் பெண்கள்:01,
பட்டியல் வேட்பாளர்கள்:09,அதில் பெண்கள்:04
5)ஏறாவூர் நகர்
முதலாம் வேட்பாளர் நியமனப்பத்திரம் வட்டார வேட்பாளர்கள்: 10,வேட்பாளர்கள் அதில் பெண்கள்:01,
பட்டியல் வேட்பாளர்கள்:09,, அதில் பெண்கள்:04
6)ஏறாவூர் பற்று செங்கலடி
முதலாம் வேட்பாளர் நியமனப்பத்திரம் வட்டார வேட்பாளர்கள்:18,வேட்பாளர்கள் அதில் பெண்கள்:03.
பட்டியல் வேட்பாளர்கள்:15,அதில் பெண்கள்:07.
7)கோறளைப்பற்று வாகரை
முதலாம் வேட்பாளர் நியமனப்பத்திரம் வட்டார வேட்பாளர்கள்: 14,வேட்பாளர்கள் அதில் பெண்கள்:02,
பட்டியல் வேட்பாளர்கள்:12,அதில் பெண்கள்:06.
8)கோறளை பற்று மேற்கு
முதலாம் வேட்பாளர் நியமனப்பத்திரம் வட்டார வேட்பாளர்கள்: 11,வேட்பாளர்கள் அதில் பெண்கள்:01,
பட்டியல் வேட்பாளர்கள்:10,அதில் பெண்கள்:05.
9)மண்முனைப்பற்று ஆரையம்பதி
முதலாம் வேட்பாளர் நியமனப்பத்திரம் வட்டார வேட்பாளர்கள்: 10,வேட்பாளர்கள் அதில் பெண்கள்:01,
பட்டியல் வேட்பாளர்கள்:09,அதில் பெண்கள்:04.
10)மண்முனை மேற்கு வவுணதீவு.
முதலாம் வேட்பாளர் நியமனப்பத்திரம் வட்டார வேட்பாளர்கள்: 10,வேட்பாளர்கள் அதில் பெண்கள்:01
பட்டியல் வேட்பாளர்கள்:09,அதில் பெண்கள்:04.
11)கோறளைப்பற்று வடக்கு.
முதலாம் வேட்பாளர் நியமனப்பத்திம் வட்டார வேட்பாளர்கள்:11,அதில் பெண்கள்:01.
பட்டியல் வேட்பாளர்கள்:10, பெண்கள்:05.
கட்டுப்பணம் அரசியல் கட்சிகள் வட்டார வேட்பாளர் ஒருவருக்கு 1500, ரூபாவீதம் செலுத்த வேண்டும்,
சுயேட்சை குழுவாயின் வட்டார வேட்பார் ஒருவருக்கு 5000, ரூபாவீதம் செலுத்தவேண்டும்
பட்டியல் வேட்பாளர்களுக்கு கட்டுப்பணம் இல்லை.
கட்டுப்பணம் (வைப்புபணம்) இன்று 05/01/2023, தொடக்கம் 20/01/2023, மதியம் 12, மணி வரை தேர்தல் தெரிவத்தாட்சி மட்டக்களப்பு அலுவலகத்தில் பொயா, ஞாயிறு விடுமுறை தவிர்ந்த நாட்களில் செலுத்தலாம்.
வேட்பு மனு 18/01/2023 தொடக்கம் 21/01/2023, நண்பகல் 12, மணிவரை மட்டக்களப்பு மாவட்ட்செயலகத்தில் தெரிவத்தாட்சி அலுவலரிடம் நேரடியாக முறைப்படி அரசியல் கட்சியாயின் பொதுச்செயலாளர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் கையளிக்கவேண்டும்.
சுயேட்சை குழு எனின் அந்த பிரதேச சபையின் தலைமை வேட்பாளரால் கையிளிக்கவேண்டும்.
21/01/2023, நண்பகல் 12, மணி தொடக்கம் பி.ப 1.30, மணிவரை கையளிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்து ஏற்றஉக் கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் விபரமும், நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் விபரமும் அறிவிக்கப்படும்.
அன்றைய தினம் தேர்தல் இடம்பெறும் தினமும் அறிவிக்கப்படும் அல்லது முன்னதாகவும் அறிவிக்கலாம்.
கட்டுப்பணம் செலுத்திய பற்றுச்சீட்டு இணைக்கப்பட வேண்டும்.
அரச உத்தியோகத்தர் ஒருவர் வேட்பாளராக நியமிக்கப்படவேண்டுமானால் வேட்பு மனுவில் கையொப்பம் இடுவதற்கு முன் அவர் கடமை புரியும் திணைக்கள தலைவரின் விடுமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதிவழங்கிய உத்தியோகபூர்வ கடிதம் இணைக்பப்டவேண்டும்.
சகல வேட்பாளர்களும் சத்தியப்பிரமானப்படிவத்தில் சமாதான நீதவான் முன்னிலையில் கையொப்பம் இட்ட படிவங்கள் இணைக்கப்படவேண்டும்,
தேசிய அடையாள அட்டை நிழல் பிரதியும் இணைக்கப்படவேண்டும்.
18, வயதிற்கு மேற்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவரும், குற்றவாளியாக ஏதேனும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்படாதவர்களும், வேட்பாளராக விண்ணப்பிக்க முடியும் என்பது பொதுவான விதி.
(பா.அரியநேத்திரன்)