உள்ளூராட்சி தேர்தல் - திறைசேரிப் பத்திரம் மூலம் நிதியை திரட்ட முடிவு



உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் 11 பில்லியன் ரூபா நிதிகோரப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கான நிதியொதுக்கீடு செய்யப்படாத காரணத்தால், திறைசேரிப் பத்திரங்களை வழங்குவதன் மூலம் நிதி திரட்டப்பட வேண்டும் என திறைசேரி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர், அரசாங்கத்தினால் தேர்தலை ஒத்திவைக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரும் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்கலாம் என எதிர்க்கட்சிகள் அச்சம் வெளியிட்டுள்ளன.
புதியது பழையவை