இலங்கை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் (Jacqueline Fernandez) முறைகேடு வழக்கில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் துபாய் செல்ல நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளார்.
தொழிலதிபர் சுகேஷ் சந்திரசேகர் மீதான 200 கோடி முறைகேடு வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமுலாக்கத்துறை தொடர்ந்த இந்த வழக்கில் கடந்த நவம்பர் 15 ஆம் திகதி ஜாக்குலின் பெர்னாண்டோவுக்கு டெல்லி நீதிமன்றம் பிணை வழங்கியது.
இதற்கிடையே வெளிநாடு செல்ல அனுமதிகோரி ஜாக்குலின் பெர்னாண்டஸ் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அந்த மனுவில், துபாயில் எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி இருப்பதால், எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை துபாய் செல்வதற்கு அனுமதி வழங்க ஜாக்குலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய அமுலாக்கத்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சைலேந்த மாலிக், 27 ஆம் திகதி வரை அமுலாக்கத்துறைக்கு அவகாசம் வழங்கி, வழக்கை அன்றைய திகதிக்கு ஒத்தி வைத்தார்.