ஜனாதிபதி ரணில் தலைமயிலான சர்வகட்சி கூட்டம்ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் சர்வகட்சி கூட்டம் இன்று(26) மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்குமாறு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இனப் பிரச்சினை தீர்வுக்கு ஒருமித்த கருத்தை எட்டுவதற்கும் தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கிலும் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு தமிழ்த் தேசியத் தரப்பு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரனும் தமிழ் மக்கள் கூட்டணியின் க.வி.விக்னேஸ்வரனும் பங்கேற்பார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் வேறுபணிகளின் நிமித்தம் பங்கேற்கமாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 

இதேநேரம், விமல் வீரவன்ஸ தலைமையிலான கூட்டணியும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது.
புதியது பழையவை