உள்ளூராட்சி தேர்தல் நடைபெறுமா இல்லையா என கட்சிகளிடையே விவாதம் இடம்பெற்றுவரும் நிலையில் தேர்தல்கள் ஆணையாளர் அதிரடி நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன்படி பொது வளங்களை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான புகார்களை பெற்றுக்கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் சிறப்பு அலுவலகத்தை அமைத்துள்ளது.
அத்துடன் முறைப்பாடுகளை தெரிவிக்க தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

