மட்டக்களப்பில் உதயகுமாரை துாக்கி எறிந்தார் சாணக்கியன் எம்.பி



மட்டக்களப்பு மாநகர சபையில் முன்னாள் மட்டக்களப்புஅரசாங்க அதிபர் மா.உதயகுமாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் எனும் கோசம் முன்னிலை பெற்று வரும் சூழலில் அவரை நிறுத்தாமல் தாண்டவன்வெளி வட்டாரத்தில் கா.பொ.த சாதாரன தரம் சித்தி அடையாத சாணக்கியனின் ஊடகச் செயலாளர் ஜனனன் குறித்த வட்டார வேட்பாளராம்.

அது போன்று சாணக்கியனின் சகாக்கள், குறிப்பாக மது கலாச்சாரத்திற்கு அடிமையானவர்களை வட்டார வேட்பாளராக்குவதில் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தப்பி ஓடிய துரைராஜசிங்கம் மீண்டும் கட்சிக்குள் நுளைந்து சாணக்கியனின் கருத்துக்களிற்கு தாளம் போடும் ஒருவராக மாறியுள்ளார்.

தற்போதைய நகர முதல்வர் சரவனபவான் சாணக்கியன் வீட்டில் உறங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சாணக்கியனின் கருத்தக்களுக்கு துரைராஜசிங்கத்துடன் இணைந்து தாளம் போட்டு சாணக்கியனின் அடிமையாக மாறியுள்ளார் சரவனபவான்.

சரவனபவான் சாணக்கியனிடம் சுய மரியாதையை இழப்பதற்கு காரணம் முதல்வர் பதவி என்பது பலரை வியக்க வைத்துள்ளது.

ஒட்டு மொத்தத்தின் தமிழரசுக் கட்சியின் அடிப்படைத் தொண்டர்கள் பலர் புறக்கணிக்கப் படுவதால், தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் கட்சியின் நடடிவக்கையால் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையும் இத் தேர்தலில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

ஒட்டு மொத்தத்தில் மட்டக்களப்பு மாநகர சபை தமிழரசுக் கட்சியிடம் தொடருமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

அது மட்டுமல்லாது, துரைராஜசிங்கம் கட்சிக்குள் நுளைந்தமை அப சகுணமாக பாரக்கப் படுகிறது.
புதியது பழையவை