மன்னார் – யாழ்ப்பாணம் வீதியில் முக்கம்பன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 9 வயது சிறுமி உயிரிழந்துள்ளார் .
வீதியைக் கடக்கின்றமுயன்ற சிறுமி மீது அம்புலன்ஸ் மோதியதில் படுகாயமடைந்த சிறுமி உடனடியாக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அம்புலன்ஸ் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.