கூட்டமைப்பின் பெயரை உச்சரிப்பதற்கு சுமந்திரனுக்கு தகுதி இல்லை



சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழரசு கட்சியிலுள்ள தலைவர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரை உச்சரிப்பதற்கு எந்த தகுதியும் இல்லை என தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

சாவச்சேரியில் இடம் பெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிவதற்காக மக்களை ஏமாற்றுகின்ற மற்றும் நம்பமுடியாத கதைகளை தமிழரசு கட்சியில் உள்ளவர்கள் கூறி வருவதாக ஸ்ரீகாந்தா குற்றம் சுமத்தியுள்ளார்.
புதியது பழையவை