உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையிலான விவாதப் போட்டியில் -மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை பற்று பிரதேச சபை தெரிவுஉள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நடைபெற்ற விவாத போட்டியின் இறுதிப் போட்டிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை பற்று பிரதேச சபை உறுப்பினர்கள்
தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை உள்ளூராட்சி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கிடையில் நடைபெற்ற விவாத போட்டியில் சுமார் 64 உள்ளூராட்சி மன்றங்கள்
பங்கு கொண்டன.

இதன் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை மண்முனை பற்று பிரதேச சபை பெற்றுள்ளது.
விவாத போட்டியின் இறுதிப்போட்டி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி மண்முனை பற்று பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களுக்குமிடையில்
கொழும்பில் நடைபெறவுள்ளது.
புதியது பழையவை