மட்டக்களப்பு முகத்துவாரம் கடற்பரப்பில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்ட வேளை மீன் பிடிக்கச் சென்ற மீனவரொருவர், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயுள்ளார்.
அந்த படகில் மீன் பிடிக்கச் சென்ற இருவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.
நேற்றைய தினம் மீன்பிடி திணைக்களத்தினால் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையிலும் குறித்த மீனவர்கள் குடும்ப வறுமை காரணமாக
மீன்பிடிக்கு சென்றுள்ளனர்.
திராய்மடு பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இருதயநாதன் அந்தோனி என்பவரே காணாமல்போயுள்ளார்.
இது தொடர்பில் மட்டக்களப்பு,கொக்குவில் பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரரணைகளை முன்னெடுத்துள்ளனர்.