மட்டக்களப்பில் - தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்டுப்பணம் செலுத்தியது



மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று நண்பகல் 12.00மணியுடன் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் ஐந்து கட்சிகளும் மூன்று சுயேட்சைக்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

துமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடும் ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி இன்று கட்டுப்பணத்தினை செலுத்தியது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.




இதேபோன்று ஈரோஸ் ஜனநாயக முன்னணி,நவ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி,ஐக்கிய தேசிய கட்சி,தேசிய காங்கிரஸ் கட்சிகளும் இன்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தியது.
புதியது பழையவை