தேர்தல் ஆணைக்குழுவின் மற்றுமொரு உறுப்பினருக்கு கொலை மிரட்டல்தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான எம்.எம்.மொஹமட்டை பதவியில் இருந்து விலகுமாறு நேற்றிரவு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் இதற்கு முன்னர் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான எஸ்.பி.திவாரத்னவுக்கு குறுஞ் செய்தி மூலம் மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட கே.பீ.பீ.பத்திரன மற்றும் திவாரத்ன ஆகிய ணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து குற்றவியல் விசாரணை திணைக்களம் விசாரணைகளை விசாரணைகளை நடத்தி வருகிறது. எஸ்..பி.திவாரத்ன, கே.பீ.பீ.பத்திரன ஆகியோர் வகித்து வந்த பதவிகளில் இருந்து விலகுமாறு கடந்த 18 ஆம் திகதி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
புதியது பழையவை