இலங்கையில் 12 மாவட்டங்களில் டெங்கு அபாய எச்சரிக்கை!



நாடளாவிய ரீதியில் இம்மாதம் மூவாயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், 12 மாவட்டங்களில் டெங்கு அபாய நிலைமை காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், கேகாலை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களும் டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
புதியது பழையவை