உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் - தபால் மூல வாக்களிப்பிற்கான 40,000 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிக்க ஆறு இலட்சத்து 76 ஆயிரத்து 873 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும், தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரச ஊழியர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை