இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாளை 588 கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவுள்ளார்.
அதன்படி அவர்கள் நாளை (04) விடுதலை செய்யப்பட உள்ளனர்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்று புனர்வாழ்வளிக்கப்படும் கைதிகளும் இக்குழுவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 31 கைதிகளுக்கு நாளை ஜனாதிபதி மன்னிப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.