திருகோணமலை - மஹதிவுல்வெவ பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் பெண்ணொருவர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் எனவும் தெரியவருகின்றது.
பொலிஸார் விசாரணை
குறித்த பெண் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது தாயாரை தாக்கியதன் காரணமாக குறித்த பெண்ணை கத்தியால் குத்தியதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் சரணடைந்துள்ளார்.
இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தவர் மஹதிவுல்வெவ -சமகிபுர பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கத்திக்குத்துக்கு இலக்கான பெண் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.