கைகுழந்தையுடன் நின்றிருந்த பெண் - சோதனையிட்ட போது கஞ்சா போதைப்பொருளுடன் கைது!
முல்லைத்தீவு - சிலாவத்தை பஸ் தரிபிடத்தில் கைகுழந்தையுடன் சந்தேகத்திற்கிடமாக நின்றுக்கொண்டிருந்த பெண் ஒருவரிடம் அதிரடிப்படையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, குறித்த பெண் வேறு பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதும் அவரிடம் கஞ்சா போதைப்பொருள் இருந்ததையும் அதிரடிப்படையினர் கண்டறிந்தனர். பின்னர் அவரை கைதுசெய்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வாறானவர்கள் மத்தியில் விழிப்பாகவும் அவதானமாக கிராம மக்கள் இருக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதியது பழையவை