சுற்றுலாப் பயணிகளுக்கு தொந்தரவு செய்யும் இலங்கை பொலிஸ் அதிகாரி!




சுற்றுலாப் பயணிகளுக்கு தொந்தரவு செய்யும் இலங்கை பொலிஸ் அதிகாரி இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளான கனடாவைச் சேர்ந்த தம்பதியிடம் வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கேட்டு இலங்கை போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் தொந்தரவு செய்யும் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

குறித்த காணொளியில், கனடா தம்பதி மோட்டார் சைக்கிளில் பணயத்தை மேற்கொண்டுள்ளனர். இவர்களை போக்குவரத்து பொலிஸார் வழிமறித்துள்ளனர்.


இதன்போது, சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கேட்டு அதனைப் பரிசோதித்த பொலிஸார், அது இலங்கையில் செல்லுபடியாகாது என்றும் இது பெரிய பிரச்சினை எனவும் இதற்காக பொலிஸ் நிலையத்தில் சுமார் 25 ஆயிரம் ரூபா வரை கட்டணமாகச் செலுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கு, குறித்த தம்பதி, அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் என்றும் எங்களிடம் இன்னுமொரு பத்திரம் இருக்கின்றது எனவும் கூறுகின்றனர்.



“இல்லை... இல்லை ... நான் உங்களுக்கு உதவி செய்கின்றேன். பொலிஸ் மற்றும் நீதிமன்றத்திற்கு போகத் தேவையில்லை” எனறு கூறிய பொலிஸ் அதிகாரியை தடுத்த கனடா தம்பதி, நாங்கள் குறித்த பணத்தை கட்டுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் தங்கள் இருவரிடம் சாரதிக்கான அனுமதிப்பத்திரம் இருக்கின்றது என்றும் கூறியுள்ளனர்.

மேலும் சாரதி அனுமதிப்பத்திரத்தை காட்டுவதற்கு முற்பட்டபோது, குறித்த பொலிஸ் அதிகாரி கையை அசைத்து தம்பதியை போகுமாறு கூறியுள்ளார்.

போக்குவரத்து பொலிஸ் அதிகாரியின் செயல் குறித்து சமூகவலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
புதியது பழையவை