மாநகர சபை வேட்பாளர் ஹெரோயினுடன் கைது!ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் புத்தளம் மாநகர சபைக்கு 3ம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மூன்று கிராம் 260 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

புத்தளம் தலைமையக பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது புத்தளம், போல்ஸ் வீதியில் வசிக்கும் 54 வயதுடைய நபர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இதற்கு முன்னரும் மூன்று தடவைகள் ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை