மஹா சிவராத்திரியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள்மஹா சிவராத்திரியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் நேற்று மாலை முதல் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு ஆதீனத்தில் சிவராத்திரி தின திருவிழா நிகழ்வுகள் நடைபெற்றன.

தமிழ் மொழியில் அனைத்து வழிபாடுகளும் முன்னெடுக்கப்படும் சிவன் ஆலயங்களில் ஒன்றாக ,மட்டக்களப்பு ஆதீனம் இருந்து
வருகின்றது.நேற்று மாலை தொடக்கம் ஆதீனத்தில் அமைக்கப்பட்டுள்ள 108 சிவலிங்கத்திற்கு ,அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றதுடன், இன்று அதிகாலை வரையில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

ஆதினத்தின் பிரதம பூசகர் தயாளன் குருக்கள் தலைமையில் முழுமையான தமிழ் மந்திரங்களுடன் சிவராத்திரி பூஜைகள் நடைபெற்றன.
இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றனர்.
புதியது பழையவை