மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடு ஒன்றின் மீது நள்ளிரவு வேளை பெற்றோல் குண்டு தாக்குதல்
நடாத்தப்பட்டுள்ளது.
ஏறாவூர் மீராக்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இந்த தாக்குதல்
நடாத்தப்பட்டுள்ளது.
இனந்தெரியாதோரினால் மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலில் வீட்டின் யன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளன.
தாக்குதல் நடாத்தப்பட்ட வீட்டில் வசிப்பவர்கள், போதைப் பொருள் ஒழிப்பு விவகாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கி, நண்பர்களுடன் இணைந்து போதை பொருள் வியாபரிகள் தொடர்பாக பொலிசாருக்கு தகவல்களை
வழங்கி வந்துள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்தவர்களுக்கு எதுவிதமான காயங்களும் ஏற்படவில்லை.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், தடயவியல் பிரிவு பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்தனர்.