உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பெயர்ப் பட்டியல் வெளியீடு!எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்திற்கும் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

 இந்தப் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதன்படி, வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள வரிசையில் இடம்பெற்றுள்ள பெயரப் பட்டியல் அடங்கிய கியூ.ஆர் குறியீடு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தக் குறியீட்டை ஸ்கான் செய்வதன் மூலம் தொடர்புடைய தகவல்களைப் பெறமுடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதியது பழையவை