கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களை இறக்கி விட்டு, மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறைச் சாலைக்குச் சொந்தமான பேருந்து, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்தோடு மோதி விபத்துக்குள்ளானது.
இன்று (20)காலை 8.10 மணியளவில் விபத்துச் சம்பவித்துள்ளது.
பேருந்தின் முன் பகுதியை யாழ்.ராணியின் இயந்திரம் மோதித்தள்ளியுள்ளது.
நடத்துனர் காயமடைந்துள்ளார்.
புகையிரத்தில் மோதுண்ட பேருந்து, அருகில் தரித்து நின்ற யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியியல் பீட பீடாதிபதியின் கார் மீதும் பஸ் மோதியதில் கார் முன்பக்கம் சேதமடைந்தது.