மட்டக்களப்பில் தாய்சேய் நிலைய கட்டட திறப்பு விழா!!



மட்டக்களப்பு- ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மாஞ்சோலை கிராமத்தில் சிகிச்சை நிலையத்திற்கான கட்டிட திறப்பு விழா இன்று(09) வியாழக்கிழமை இடம் பெற்றது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே. முரளீதரன் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் திட்ட பணிப்பாளர் ஆர்.இராநெடுஞ்செலியன், மட்டக்களப்பு மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.நவலோஜிதன், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா, ஐ.எஸ்.ஆர்.சி.ஸ்ரீலங்கா அமைப்பின் திட்ட பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.ஜூனைட் நளீமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குவைத் நாட்டின் பைதல் சக்காத் நிறுவனத்தின் பத்து மில்லியன் நிதியளிப்பில் ஐ.எஸ்.ஆர்.சி .ஸ்ரீலங்கா அமைப்பின் அனுசரனையில் சிகிச்சை நிலையம், சிறுவர் பூங்கா, சிகிச்சை நிலையத்திற்கான தளபாடங்கள், நிலையத்திற்கான உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டுள்ளதாக ஐ.எஸ்.ஆர்.சி.ஸ்ரீலங்கா அமைப்பின் திட்ட பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.ஜூனைட் நளீமி தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளை ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையிலான குழுவினர் நினைவு சின்னம் வழங்கி கௌரவித்தனர்.
புதியது பழையவை