மட்டக்களப்பு கல்குடா - வாழைச்சேனையில் தனிமையில் வீடொன்றில் வசித்து வந்த பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உறவினர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இன்று (09.02.2023) இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கல்குடா - வாழைச்சேனையைச் சேர்ந்த பாஸ்கரன் சற்குணதேவி (வயது (52)) என்ற 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.