தொழிலை இராஜினாமா செய்யாமல் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் பாடசாலை அதிபர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் சட்டத்தின்படி, அரச துறையில் பணியாளராக கடமையாற்றும் அதிகாரி, ஏதாவது தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டால், அவர் வேட்புமனுவைச் சமர்ப்பிப்பதற்கு முன்னர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.
அனுராதபுரத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி அநுராதபுரம் மாநகர சபைக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தநிலையில், தனது அதிபர் பதவியை இராஜினாமா செய்யாமல் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பான முறைப்பாட்டை பரிசீலித்த வடமத்திய மாகாண கல்வி திணைக்களம், குறித்த அதிபரின் சேவையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.