மட்டக்களப்பில் பாம்பு தீண்டி சிகிச்சை பெற்றுவந்த நபரொருவர் உயிரிழப்பு!மட்டக்களப்பு பகுதியொன்றில் பாம்பு தீண்டி சிகிச்சை பெற்றுவந்த நபரொருவர் நேற்றைய தினம் (20-02-2023) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் தனது காணியில் கடந்த வியாழக்கிழமை (16-02-2023) வேலை செய்து கொண்டிருந்த போது பாம்பு தீண்டி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபர் ஓட்டமாவடி - சூடுபத்தின சேனையில் வசித்து வந்த 61 வயதுடைய சேகு இஸ்மாயில் முகம்மது உசனார் என்பது தெரியவந்துள்ளது.
புதியது பழையவை