அம்பாறை சம்மாந்துறை கற்குவாரியில் காணப்பட்ட நீர்த் தேக்கத்தில் நீராடிய சிறுவன், நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், இன்று(27) மதியம் இடம்பெற்ற மரண விசாரணையின் பின்னர் சிறுவனின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நேற்று (26)மாலை 5.30 மணியளவில் கற்குவாரியில் நீராடச் சென்ற போதே சிறுவன் அனர்தத்தில் சிக்கியுள்ளான்.
சிறுவனுடன் நீராடச் சென்ற சக நண்பர்களின் கூக்குரலைச் செவிமடுத்த அயலவர்கள், நீரில் மூழ்கிய சிறுவனைத் தேடியபோது, 11 அடி ஆழத்தில், சகதியில் சிக்கி உயிரிழந்த நிலையில், சிறுவனை மீட்டனர்.சிறுவனின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, நீதிமன்ற கட்டளையின் பிராகரம் மரண விசாரணை இடம்பெற்றது.இதன்பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள இந்த கல்குவாரி குட்டை சுமார் 20 வருடங்களாக உபயோகிக்கப்படாமல் காணப்படுவதாகவும் 30 அடி ஆழமாக உள்ளதாகவும் அப் பிரதேச மக்கள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.