கடவுச்சீட்டு தொடர்பில் குடிவரவு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!



வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கு நேரத்தையும் திகதியையும் முன்பதிவு செய்துள்ளவர்கள் அந்த திகதிக்கு மறுநாள் வருமாறு இலங்கை குடிவரவுத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

பத்தரமுல்லை குடிவரவு திணைக்களத்தின் கணனி அமைப்பில் நேற்று ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு தொடர்பிலான அறிவிப்பை வெளியிடும் போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிநுட்ப கோளாறு காரணமாக நேற்று வழங்கப்படவிருந்த வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றதமான சூழல் நிலவியது.

நேற்றைய தினம் வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளவிருந்த அனைவரையும் இன்று நண்பகல் 12 மணிக்கு பின்னர் பத்தரமுல்லையில் உள்ள அலுவலகத்திற்கு வந்து வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று வர முடியாதவர்களின் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
புதியது பழையவை