மட்டு - ஏறாவூரில் விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரை!மட்டக்களப்பு ஏறாவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள விற்பனை நிலையத்தில், இன்று காலை பரவிய தீயினால், கடையிலிருந்த பொருட்கள்
தீக்கிரையாகின.

தீ விபத்துத் தொடர்பில் மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, விரைந்து வந்த தீயணைப்புப் பிரிவினர் பொதுமக்களின்
உதவியுடன் தீயினைக் கட்டுப்பாட்டிருக்குள் கொண்டு வந்தனர்.

மின் ஒழுக்குக் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், ஏறாவூர் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.
புதியது பழையவை