தலைவர் பிரபாகரனால் நிராகரிக்கப்பட்டவர்களே இந்த மும்மூர்திகள் - கி.துரைராசசிங்கம்



தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டு ஒன்றை 2001, இல் உருவாக்கும் போது அப்போது ஆயுளுதக் குழுக்களாக இருந்து அரசியல் நீரோட்டத்தில் இணைந்த கட்சிகளை சேர்க்கும்போது விடுதலைப் புலிகளுடைய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறிய நிபந்தனைகள் என்ன என்பதை கடந்த ஜனவரி மாதம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் சாணக்கியன் எம். பியின் காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம் பகிரங்கமாக கூறியிருந்தார்.

இந்தச் செய்தி எப்படியோ ரெலோ பொதுச்செயலாளர் ஜனாவின் காதுக்கு சென்றுவிட்டது. துரைராசசிங்கத்திடம் இதனை கேட்கவும் அவருக்கு முடியவில்லை.


ரெலோ வேட்பாளர்கள் அவரின் மட்டக்களப்பு வீட்டில் கூடிய கூட்டத்தில் துரைராசசிங்கத்தை ஜனா திட்டித் தீர்த்தாக மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் சீலன் மூலம் அறியக்கிடைத்தது.

விடுதலைப் புலிகள் முன்வைத்த மூன்று நிபந்தனை தொடர்பில் மத்தியகுழுவில் கலந்துகொண்ட வாலிபர் அணித் தலைவர் கி.சேயோன் கேட்டதாகவும் அதற்கு துரைராசசிங்கம் விடுதலைப் புலிகளின் தளபதிகள் தமக்கு கூறிய மூன்று நிபந்தனைகளும் இதுதான் என பட்டியலிட்டார்.

1. தமிழீழ விடுதலை இயக்கத்தின் மூலம்(TELO) மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கொலைகளை செய்த ஜனா எனப்படும் கோவிந்தன் கருணாகரம் என்பவரை உள்வாங்க கூடாது.

2. ஈழமக்கள் புரட்சிகர முன்னணி மட்டக்களப்பு பொறுப்பாளராய் இருந்து வவுணதீவு பாலத்தில் சாக்கை மூடிக்கொண்டு காட்டிக்கொடுத்த இரா.துரைரெட்ணத்தை எடுக்க கூடாது.


3. தமிழ் மக்கள் விடுதலைக்கழகத்தை(PLOTE) கட்சி எந்தகாலத்திலும் இணைக்க வேண்டாம்.


இந்த மூன்று நிபந்தனைகளையும் 2001, இல் கூறி அதற்கு சம்மதம் வழங்கிய பின்னரே ஏனைய தமிழர் விடுதலை கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழீழ விடுதலைக் கழகம், ஈழமக்கள் புரட்சிகர முன்னணி ஆகிய நான்கு கட்சிகளும் உள்வாங்கப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது என்பதை விபரமாக தமிழரசுக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் துரைராசசிங்கம் தமிழரசு கட்சி மத்தியகுழுக்கூட்டத்தில் விபரித்தார்.

துரைராசசிங்கத்திற்கு தலைவர் பிரபாகரன் இட்ட கட்டளை எப்படி தெரிஞ்சது என தேடியபோது அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் விடுதலைப் புலிகள் இயக்க ஆரம்ப கால உறுப்பினர் வந்தாறுமூலை பாதர் என அழைக்கப்படும் சின்னத்துரை என்பவரே இந்த உண்மையை கூறியதாக தெரியப்படுத்தினார்.


இந்த விடயம் உண்மையானது தான் என்பதற்கு ஆதாரம் 2009, மே,18, முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் முடிவுறும்வரை மட்டக்களப்பு ரெலோ ஜனாவை தமிழ்தேசியக் கூட்டமைப்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்வாங்கவில்லை, இதேபோல் மட்டக்களப்பு ஈபிஆர்எல்எவ் இரா துரைரெட்ணத்தை அதன் தலைவர் சுரேஷ்பிரமச்சந்திரன் உள்வாங்கவில்லை, தர்மலிங்கம் சித்தாத்தன் தலைமையிலான புளட் கட்சியை சம்பந்தனோ, மாவையரோ ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

ஆனால் 2012, கிழக்கு மாகாணசபை தேர்தல் அறிவிப்பு வந்தபோது தான் பதுங்கி பதுங்கி லண்டனில் இருந்து திரும்பிய ஜனாவை ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், அப்போதைய செயலாளர் நாயகமாக இருந்த சிறிகாந்தாவும், மட்டக்களப்பில் திருமணம் முடித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இந்திரகுமார் பிரசன்னாவும் ஜனாவை கிழக்கு மாகாணசபை வேட்பாளராக ரெலோ மூலம் தமிழ்தேசியக் கூட்டமைப்பில் நியமித்தனர்.

மட்டக்களப்பு ஈபீஆர்எல்எவ் துரைரெட்ணமும் 2012, இல் கிழக்கு மாகாணசபை வேட்பாளராக உள்வாங்கப்பட்டார். அதற்கு முன்னர் 2008, கிழக்கு மாகாணசபை தேர்தலில் விடுதலைப் புலிகள் அந்தத் தேர்தலை பகிஷ்கரித்தபோது துரைரெட்ணம் புளட் கட்சியுடன் இணைந்து மட்டக்களப்பில் ஒரு சுயேட்சை குழுவில் போட்டியிட்டு தெரிவாகி மகிந்த ராசபக்‌ஷவின் செல்லப்பிள்ளையாக செயல்பட்டார்.


2011,ல் வடமாகாணத்தில் சில சபைகளில் உள்ளூராட்சி சபை தேர்தலின்போது தான் புளொட்டை சம்மந்தனும், மாவை, செல்வம், சுரேசும் அவரை தமிழ்தேசியக் கூட்டமைப்பில் சேர்தனர். இதுதான் உண்மை.

2009,மே,19, இரவு BBC, வானொலியில் புளொட் தலைவர் சித்தாத்தனிடம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் தொடர்பாக நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என நிருபர் கேட்டபோது சித்தார்த்தன் “ பிரபாகரனின் மரணம் தனக்கு மகிழ்ச்சியை தருவதாகவும் இது எப்பொதோ தாம் எதிர்பார்த்த விடயம் எனவும் இதனை மேற்கொண்ட அதிபர் மகிந்த ராஷபக்சவையும் அதன் அரசையும் தாம் பாராட்டுவதாகவும் கூறியிருந்தார்”

அதே கேள்வியை அன்று இரவு EPDP தலைவர் அமைச்சர் டக்லஷ் தேவானந்தாவிடம் கேட்டபோது “ புலிப் பயங்கரவாதம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. அந்த பயங்கரவாதி பிரபாகரன் கொல்லப்பட்டது நாட்டுக்கு விமோசனம் கிடைக்கவேண்டும். அதேவேளை தமிழ் மக்களுக்காக மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் தனியாட்சி ஏற்படுத்தி நாட்டில் நிரந்தர சமாதனம் ஏற்படுத்த தாம் அரசாங்கத்திடம் வலியுறுத்துவேன் என கூறியிருந்தார்”

இவர்கள் எல்லாம் விடுதலைப் புலிகளால் துரோகப்பட்டம் வழங்கப்பட்டவர்கள் மட்டுமன்றி விடுதலைப் லிகளுக்கு பயந்து ஒழித்து வாழ்ந்தவர்கள் என்பது அன்றைய காலத்தில் எல்லோரும் அறிந்தது.

தற்போது காலம் தலைகீழாக மாறி இவ்வாறானவர்கள் தமிழ் தேசியம், தலைவர் பிரபாகரன், என்றெல்லாம் பேசுவதை பார்த்து உண்மையான தேசியவாதிகளுக்கு நெஞ்சு கனத்து வலிக்கிறது.

தற்போதை உள்ளூராட்சி சபை தேர்தல் சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சியும், ரெலோ, புளொட்டும் பிரிந்து இரண்டு கட்சியாக மாறி தேர்தலில் சந்திக்கின்றனர்.



தமிழரசுக் கட்சி அணி வீட்டுச்சின்னம் வழமையான அவர்களின் சொந்தக் கட்சி. ரெலோ, புளொட் அவர்களுடன் ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டாம் . இந்தப்பழம் புளிக்கும் என ஓடிய EPRLF சுரேஷ் பிரமச்சந்திரன் குழு, ரெலோவை விட்டு ஒதுங்கி பதுங்கி இருந்த சிறிகாந்தா, சிவாஜிலிங்கம், இவர்களுடன் ஜனநாயக போராளி கட்சி ஆகிய ஆயுத குழுக்கள் எல்லாம் இணைந்து ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி (DTNA) என்ற குத்துவிளக்கு சின்னத்தை கொண்ட கட்சியில் உள்ளூராட்சி தேர்தலில் முகம் கொடுக்கின்றனர்.

இதில் சுவார்சியம் என்னவெனில் தமது கட்சியின் உண்மையான பெயரை உச்சரிக்க கூட திராணியற்றவர்களாக இன்னொருவர் பதிவு வைத்த TNA என்ற பெயரை பயன்படுத்தி வாக்குகேட்பதுதான் அவர்களுக்கே குற்றம் உள்ள நெஞ்சு குறு குறுக்கும் செயலாக மாறியுள்ளது.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் யாரை எல்லாம் சேர்க்கவேண்டாம் என ஆலோசனை வழங்கி இருந்தாரோ? அந்த துரோக கும்பல் தலைவரால் வைத்த TNA என்ற பெயரை எந்த முகத்துடன் பாவிக்கின்றனர்? அதுவும் 2008, இல் புளொட் ஒட்டுக்குழு உறுப்பினர் ராகவன் என்பவரை செயலாளர் நாயகமாகக் கொண்ட ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி (DTNA) Dஐ மறைத்து வேடம் போடுவது அவர்களுக்கே அவர்களின் சொந்தக் கட்சியின் பெயரை பாவிப்பதற்கு மனச்சாட்சி உறுத்துகிறது.


ஏன் என்று சிந்தித்தபோது அதற்கான விடையை யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வு பெற்ற நீதியரசர் விக்னேஷ்வரன் தெளிவுபடுத்தியிருந்தார்.


DTNA என்ற கட்சி செயலாளர் ராகவன் மட்டக்களப்பு ஊடகவியலாளர் தராகி எனப்படும் மாமனிதர் சிவராம் என்பவரை படுகொலை செய்த சந்தேகநபராக குற்றம் சாட்டப்பட்டவர் என்பதை பகிரங்கமாக கூறினார். இதனை அந்தக் கட்சியைச் சேர்ந்த எவரும் இதுவரை மறுதலிக்கவில்லை.

அப்படியாயின் தமிழ்தேசியக் கூட்டமைப்பை ஆரம்பிக்க உறுதுணையாக செயல்பட்ட கிழக்கு பத்திரிகையாளர் சங்கத்தின் ஆலோசகர் சிவராம் என்பவரின் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கட்சி செயலாளர் பெயரில் உள்ள ஜனநாய தமிழ்தேசிய கூட்டணி DTNA என்ற கட்சியின் உண்மையான பெயரை மாற்றி சிவராமால் ஆரம்பித்த TNA கட்சி பெயரை எந்த கோரமுகத்துடன் பாவித்து நோட்டீஷ் அடித்து வாக்கு கேட்கின்றனர் என்பதை புரிவது நல்லது.

தேர்தல்கள் வரலாம் வராமல் விடலாம். ஆனால் இவ்வாறான குள்ளநரிகள் தலைவர் பிரபாகரனுக்கு துரோகம் செய்து அவரால் நிராகரிக்கப்பட்ட ரெலோ ஜனா,  ஈபிஆர்எல்எவ துரைரெட்ணம், புளொட் சித்தார்த்தன் ஆகியோர் அடங்கிய DTNA கட்சியை உண்மையான உணர்வான தமிழர்கள் ஆதரிப்பாளர்களா?

அடுத்தது ஜனநாயப் போராளிகள் கட்சியும் இந்தக் கூட்டில் சேர்த்துள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் எவரையும் தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளவரை எந்த தேர்தலிலும் வேட்பாளரார்களாகவோ, தேர்தல் அரசியலிலோ ஈடுபடுத்தவில்லை.


இப்போது அவர்களும் DTNA கட்சியில் இணைந்து தலைவர் பிரபாகரனுடை முகத்தில் கரிபூசிவிட்டார்கள் என்பது அவர்களுடைய மனச்சாட்சி சொல்லும்.
புதியது பழையவை