உள்ளூராட்சி சபைத் தேர்தல் - நாடாளுமன்றத்திடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை!உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்துவதற்கான நிதியை விடுவிக்குமாறு நாடாளுமன்றம் மற்றும் சபாநாயகரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு எழுத்து மூலம் கோரியுள்ளது.

இது தொடர்பான கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், கடிதம் கிடைக்கப் பெற்றதை சபாநாயகரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த 23ஆம் திகதி உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போதுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு தற்காலிகமானது என்றும், அவர்கள் நாடாளுமன்றத்துக்கே பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தேர்தல் நடவடிக்கைகள்
இந்நிலையில் நிதி தொடர்பான அதிகாரம் நாடாளுமன்றத்துக்குரியது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை தொடர்ந்து தடையின்றி முன்கொண்டு செல்வதற்கு தேவையான நிதியை விடுவிக்கப் பணிக்குமாறு கோரி சபாநாயகருக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை