பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடையும் என ஜனாதிபதி தெரிவித்த கருத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெற்றியோ, தோல்வியோ உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனால் மகிந்த ராஜபக்சவுடன் அரசியல் கொள்கை ரீதியில் வேறுபாடுகளுடன் காணப்படும் தரப்பினரும் அவருக்கு ஆதரவாக செயற்படுகின்றனர்.
மகிந்தவின் தேர்தல் தொடர்பான இந்த நிலைப்பாடு, ரணிலுக்கான அரசியல் எதிர்ப்புக்களுக்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.