ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் நினைவு தினம்எறிகணை தாக்குதலில் உயிரிழந்த ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் நினைவுதினம் இன்று (13-02-2023)மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஒன்றியத்தின் தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் மட்டக்களப்பு நகர் காந்தி பூங்கா முன்றலில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

இறுதி யுத்தத்தின் போது எறிகணை தாக்குதலில் உயிரிழந்த ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் 14 வது நினைவு தின அனுஷ்டிப்பு நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியாலரள்கள் கலந்துகொண்டனர்.

தீப சுடர் ஏற்றி ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலியும் செலுத்தி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
புதியது பழையவை