மட்டக்களப்பு காக்காச்சிவட்டை வரதராஜன் அரிசி ஆலையில் - பெரும்போக நெல் கொள்வனவு!அரசால் முன்னெடுக்கப்படும் பெரும்போக நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பு அகற்றல் நிகழ்ச்சித்திட்டம் நாளை
17ஆம் திகதி காலை 9 மணியளவில் காக்காச்சிவட்டை வரதராஜன் அரிசி ஆலையில் ஆரம்பிக்கப்படவிருக்கிறது.

நெல் விற்பனை செய்யவிரும்பும் சகல விவசாயிகளையும் குறித்த இடத்துக்கு நெல்மூடைகளோடு வருகை தருமாறு அறிவிக்கவும்.

1. பின்னிணைக்கப்பட்டுள்ள படிவத்தில் கோரப்பட்டுள்ள தகவல்களையும் (நெல் வெள்ளை/சிவப்பு/ஈரமானது...) தகவல்களை உறுதிப்படுத்தும் ஏனைய ஆவணங்களையும் விவசாயிகள் கைவசம் வைத்திருக்க வேண்டும்.

அடையாள அட்டை, வயற்காணிப் பதிவேடு, உரப்பற்றுச்சீட்டு, குறிப்பிட்ட மூன்று வங்கிகளில் ஒன்றின் வங்கிப்புத்தகம்.

2. இயன்றளவு காய்ந்த நெல்லையே விற்பனைக்குக் கொண்டுவருமாறு விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

3. நெல் விற்பனை செய்த பின்னர் விவசாயிக்கு வழங்கப்படும் வங்கிப்பிரதியை அவர் இரண்டு - மூன்று நாட்களில் குறிப்பிட்ட வங்கிகளுக்குச் சமர்ப்பிக்கும் போது அவரது வங்கிக்கணக்கில் அவருக்கான கொடுப்பனவு வரவு வைக்கப்படும்.

இதற்கென தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள வங்கிகள் - இலங்கை வங்கி, மக்கள் வங்கி, கிராமிய அபிவிருத்தி வங்கி (RDB) ஆகிய மூன்றும் மட்டும்.

விவசாயிகளிடமிருந்து நெல்லை பிரதேச செயலகம் வாங்க இன்று அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

அவ்வாறு வாங்கிய நெல்லை அரிசி ஆலையில் குற்றி அரிசி வழங்கும் திட்டம் அமுல் படுத்தப் படவுள்ளது.

எனவே, விவசாயிகளின் PLR இலக்கத்துடன் கிடைக்கக் கூடிய நெல் அளவை உடனடியாக உறுதிப் படுத்தவும்.

தேவையான நெல் அளவு.
397,876.92kg.

ஈரப்பதன் இல்லாதது வாங்கும் விலை 100/=

ஈரப்பதன் உடையது 88/=

பிரதேச செயலாளர்,
பிரதேச செயலகம்,
போரதீவுப்பற்று
வெல்லாவெளி.

புதியது பழையவை