வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணிக்கு - ஏறாவூர் நகர் பகுதியில் சிங்கக் கொடி காட்டிய நபர்கள்“வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய உரிமைப் பேரணிக்கு” சில நபர்கள் சிங்கக் கொடியை காட்டியுள்ளனர்.

'தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து' என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகிய வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி இறுதி நாளான இன்று (07)ஏறாவூர் நகர் பகுதியில் சென்ற போது இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.


பேரணிகாரர்கள் மஞ்சள் - சிவப்பு கொடிகளுடன் ஏறாவூர் நகர் பகுதியை கடந்தபோது, வீதியோரம் நின்ற சிலர் சிங்கக் கொடியை காட்டியுள்ளனர்.

ஏறாவூர் நகரில் காவல்துறை பாதுகாப்பும் அதிகரித்து காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதியது பழையவை